பெண் குழந்தையின் பெயர் இதுதான்... நல்ல நாளில் ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்

பெண் குழந்தைக்கு பெயர் சூட்டியதை ஹரிஷ் கல்யாண் அறிவித்தார்.
பெண் குழந்தையின் பெயர் இதுதான்... நல்ல நாளில் ஹரிஷ் கல்யாண் கொடுத்த அப்டேட்
Published on

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும், பார்க்கிங், லப்பர் பந்து போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியையும், பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.

அதன்பின் கடந்தாண்டு வெளிவந்த டீசல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தாஷமக்கான் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும், நர்மதா உதயகுமார் என்பவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தைப் பிறந்தது.

இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா தம்பதியினரின் பெண் குழந்தைக்கு "கிரியா ஹரிஷ்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ் வருடப்பிறப்பை ஒட்டி பெண் குழந்தைக்கு பெயர் சூட்டியதை ஹரிஷ் கல்யாண் அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com