15 வருடங்களுக்கு பிறகு சிம்புவோட நடித்தது மகிழ்ச்சி - திரிஷா

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
15 வருடங்களுக்கு பிறகு சிம்புவோட நடித்தது மகிழ்ச்சி - திரிஷா
Published on

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இன்று படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த நிகழ்வில் மணி ரத்னம், ஏ.ஆர் ரஹ்மான், கமல், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் மற்றும் படக்குழு கலந்துக் கொண்டது. அதில் திரிஷா பேசியதாவது

`இந்த படத்தில் நான் நடித்தது கனவு மெய்ப்பட்ட தருணம். மணிரத்னம், கமல் போன்றவர்களுடன் நானும் இணைந்திருப்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. சிம்புவும் நானும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' என்ற படத்தில் இணைந்து நடித்தோம். இப்போதும் பலர் அந்த படத்தை பற்றிதான் கேட்கிறார்கள். மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்பார்கள். தக்லைப் படம் மூலம் அந்த மேஜிக் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com