ஹேப்பி ராஜ் விமர்சனம்

ஹேப்பி ராஜ் விமர்சனம்

Published on
ஹேப்பி ராஜ் விமர்சனம்(2 / 5)

பல வருடங்களுக்கு பிறகு பிறந்த மகன் என்பதால், ஜி.வி.பிரகாஷ் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருக்கிறார் ஜார்ஜ் மரியன். ஜிவி பிரகாஷை பொத்தி பாதுகாத்து வளர்க்கிறார். ஆனால் தந்தையின் தோற்றத்தை வைத்து சமூகம் கேலி செய்வதால், அவரிடம் இருந்து விலகி வாழ முடிவு செய்து பெங்களூரில் வேலைக்கு செல்கிறார்.

அலுவலகத்தில் சக ஊழியரான ஸ்ரீகவுரி பிரியாவை ஜிவி பிரகாஷ் காதலிக்கிறார். பெரும் பணக்காரரான ஸ்ரீகவுரி பிரியாவின் தந்தை அப்பாஸ் மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். இருவீட்டாரும் பெங்களூருவில் ஒன்றுகூடி திருமண பேச்சை தொடங்கும் சூழலில், ஜார்ஜ் மரியன் - அப்பாஸ் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் திருமணம் தடைபடுகிறது.

இறுதியில் ஜிவி பிரகாஷ், ஶ்ரீகவுரி பிரியா திருமணம் நடந்ததா? அப்பாஸ், ஜார்ஜ் மரியன் இருவரும் என்ன மோதல் நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜி.வி.பிரகாஷ், வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல இடங்களில் ஓவர் ஆக்டிங்காக இருந்தது. தந்தை - மாமனார் இடையே சிக்கிக் கொள்வது போன்ற காட்சிகளில் மட்டும் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தின் உண்மையான பலம் ஜார்ஜ் மரியன். மகனின் அன்புக்காக ஏங்கும் தந்தையாக, மனதை தொடும் நடிப்பை கொடுத்து கவர்ந்து இருக்கிறார். இவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு உயிர் ஊட்டுகிறார். பல இடங்களில் அவரது உணர்ச்சி வெளிப்பாடுகள் பார்வையாளர்களை  ரசிக்க வைக்கிறது.

நாயகியாக ஸ்ரீகவுரி பிரியா, அழகும் இயல்பான நடிப்பும் கொண்டு கவனம் ஈர்க்கிறார். அப்பாஸ், நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து தனது அனுபவத்தால் காட்சிகளில் நிறைவு சேர்க்கிறார். கீதா கைலாசம் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்கம்

தந்தை - மகன் உறவை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன். சமூகத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்ற கருத்தை ஆழமாக சொல்லி இருக்கிறார். காமெடி காட்சிகள் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தம். கடைசி பத்து நிமிடம் மட்டுமே படத்தை ரசிக்க முடிகிறது.

ஒளிப்பதிவு

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு சிறப்பு.

இசை

ஜஸ்டின் பிரபாகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com