ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது ஹன்சிகா வழக்கு

எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் அவதூறான விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளார்.
ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது ஹன்சிகா வழக்கு
Published on

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையான ஹன்சிகா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர்.

இந்நிலையில் ஹன்சிகாவின் முன்னாள் நாத்தனாரும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை திண்டோசி அமர்வு நீதிமன்றத்தில் ஹன்சிகா அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். ஹன்சிகா புகார் மனுவில் தனது நாத்தனார் சமூக ஊடகங்களிலும் பிற இடங்களிலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றுள்ளார்.

இதையொட்டி அவர் எனக்கு ரூ.2 கோடி இழப்பீடும் பகிரங்க மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்கும் ஒரு மூன்றாம் தர நடிகை. அடிக்கடி விலை உயர்ந்த பைகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்.

ஆனால் எனக்குத் தரவேண்டிய ரூ.27 லட்சம் கடனை மட்டும் தராமல் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். கடனை திருப்பி செலுத்துவதை தவிர்ப்பதற்காக எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் அவதூறான விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தனது கணவரும் ஹன்சிகாவின் சகோதரர் மற்றும் ஹன்சிகா மீது கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஹன்சிகா என் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை. இந்த முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com