மொரீசியஸ் தீவில் ஹன்சிகா

கடற்கரையில் தோழியுடன் இருப்பது போலவும் மற்றும் சிங்கத்தோடு ஹன்சிகா போஸ் கொடுப்பது போலவும் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ந்து உள்ளார் ஹன்சிகா.
மொரீசியஸ் தீவில் ஹன்சிகா
Published on

கோடை வெயில் வறுத்தெடுக்கும் நிலையில் பிரபலங்கள் பலர் கடற்கரை தீவு மற்றும் குளிர் பிரதேசங்களை தேடி செல்கின்றனர்.

கடந்த சில தினங்களாக நடிகர், நடிகைகள் சுற்றுலா சென்று வெயிலுக்கு இதமாக கடற்கரை மற்றும் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியோடு துள்ளி குதித்து விளையாடும் புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஹன்சிகா மொரீசியஸ் தீவிற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். மொரீசியஸ் கடற்கரையில் பிகினி உடையில் தோழியுடன் ஜாலியாக விடுமுறையை கொண்டாடியுள்ளார். சமீபத்தில் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் ஹன்சிகாவின் இன்ப சுற்றுலா வைரலாகி வருகிறது.

கடற்கரையில் தோழியுடன் இருப்பது போலவும் மற்றும் சிங்கத்தோடு ஹன்சிகா போஸ் கொடுப்பது போலவும் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ந்து உள்ளார் ஹன்சிகா.

X

Maalai Malar
www.maalaimalar.com