கெஸ்ட்- திரை விமர்சனம்

கெஸ்ட்- திரை விமர்சனம்

இயக்குனர் ரங்கா புவனேஷ்வர், ஹாரர் மற்றும் திரில்லரை இணைத்து ஒரு கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார்.
Published on
கெஸ்ட்- விமர்சனம்(2 / 5)

காடு சூழ்ந்த மலைப்பகுதியில் ஒரு காதல் ஜோடி சுற்றுலா செல்கிறது. அமைதியான பயணம் ஆக இருக்கும் என்று நினைக்கும் அவர்கள், திடீரென மர்மமான ஓநாய் மனிதன் “Wolf Man” போன்ற உயிரினத்தை சந்திக்கிறார்கள்.

உயிர் பிழைக்க அவர்கள் ஒரு தனிமையான பண்ணை வீட்டில் தஞ்சம் அடைகிறார்கள். ஆனால் அங்கு இருப்பவர்கள் கூட சாதாரண மனிதர்கள் அல்ல என்பது தெரிய வர, அவர்கள் சிக்கிக்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கெஸ்ட் படத்தின் கதை.

நடிகர்கள்

நாயகியாக நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், ஆரம்பத்தில் சாதாரண காதல் பெண்ணாக இருந்தாலும், பின்னர் பயம், பதட்டம், உயிர் பிழைக்க போராடும் நிலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாறுகிறது. அந்த மாற்றத்தை அவர் நன்றாக கையாள்கிறார். சில காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

மற்ற நடிகர்களும் தங்களுக்கான பங்கை சரியாக செய்துள்ளனர். குறிப்பாக சஸ்பென்ஸ் மற்றும் உயிர் பிழைத்தல் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

இயக்கம்

இயக்குனர் ரங்கா புவனேஷ்வர், ஹாரர் மற்றும் திரில்லரை இணைத்து ஒரு கதையை சொல்ல முயற்சி செய்துள்ளார். காடு, இரவு, தனிமை போன்ற அம்சங்களை பயன்படுத்தி ஒரு பதட்டம் உருவாக்கியிருக்கிறார். திரைக்கதை ஆரம்பத்தில் பில்டப் கொடுத்து, பின்னர் சஸ்பென்ஸ்க்கு செல்லும் வகையில் அமைந்துள்ளது.

படத்தின் முதல் பாதி மெதுவாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதைக்கு வேகம் அதிகரிக்கிறது. சில திருப்பம் எதிர்பார்க்கக்கூடியதாக இருந்தாலும் மொத்தத்தில் படத்தை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

ஒளிப்பதிவு & இசை

ரமேஷ் குணசேகரன் ஒளிப்பதிவு மற்றும் தாரிக் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம்.

குறிப்பாக காடு சார்ந்த காட்சிகள் மற்றும் இரவு காட்சிகளில் பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com