

நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளின் ப்ரோமா வீடியோ மற்றும் தலைப்பையும் இன்று மாலை 5.50 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இப்பாடலை யார் பாடியிருப்பார் என கெஸ் செய்யுங்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலை பலரும் அனிருத் பாடியிருப்பார் என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Maamey! God Bless You, for all the love ✨ #GoodBadUgly Second Single announcement with promo today at 5.50 PM.Indha paatakku speakers blast dhaan ???Keep guessing the singer, maamey ?#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment ?