ஏன் நான் உனக்கு வேணாம்ன்னு ஒரு காரணம் சொல்லு ? - Miss You டீசர் வெளியீடு

இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார்.மிஸ் யூ திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஏன் நான் உனக்கு வேணாம்ன்னு ஒரு காரணம் சொல்லு ? - Miss You டீசர் வெளியீடு
Published on

கடந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நடிகர் சித்தார்த்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து மிஸ் யூ என்ற காதல் கதைக்களத்தை மையமாக கொண்டு இருக்கும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன் தயாரிக்க ராஜ்சேகர் இயக்கியுள்ளார். ராஜசேகர் இதற்கு முன் ஜீவா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் ஆஷிகா ரங்கனாத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. சித்தார்த் மற்றும் ஆஷிகா ரங்கனாத் காதலிக்காமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது அது என்ன என்று வெளிப்படுத்தவில்லை. டீசர் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com