தியேட்டரில் 'கருப்பசாமி' பார்த்து பரவசமடைபவர்களுக்கு முதலுதவி கொடுங்கள்..! சூர்யா அன்பான வேண்டுகோள்

கருப்பு படத்தை ரிலீஸ் ஆகி மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தியேட்டரில் 'கருப்பசாமி' பார்த்து பரவசமடைபவர்களுக்கு முதலுதவி கொடுங்கள்..! சூர்யா அன்பான வேண்டுகோள்
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் திரைப் பயணத்தில் மிகச்சிறந்த கமர்ஷியல் கம்பேக் படமாக அமைந்துள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கருப்பு படம் வெளியாக இருந்த நிலையில், சில நிதி சிக்கல்கள் காரணமாக ஒத்திப்போனது.

பின்னர் படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

கருப்பு படத்தை காண வரும் பலருக்கு திரையரங்குகளிலேயே சாமி வந்து பரவசமடைகின்றனர். இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாக காண முடிகிறது.

இந்நிலையில், “கருப்பசாமியைக் கண்டு பரசவசம் அடைபவர்களுக்கு உரிய முதலுதவி வழங்கி உதவுங்கள்” -ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கருப்பு திரைப்படத்திற்கு ஏற்பட்ட தடைகளைத் தாண்டி முழு ஆதரவு தந்து, வெற்றிகரமாகத் திரையிட்டுவரும் என் அன்பிற்குரிய திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளியீட்டிற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விநியாகஸ்தர் சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

மேலும், திரையரங்குகளில் கருப்பசாமியைக் கண்டு பரவசமடைபவர்களுக்கு, உரிய முதலுதவி வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த நேரத்தில் மற்றவர்கள் அதை வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுருத்த அன்போடு வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com