‘96 கிலோ’ உடல் எடையை குறைத்தது எப்படி? -நடிகர் கவுதம் ராம் கார்த்திக்

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கவுதம் ராம் கார்த்திக் சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறி உள்ளார்.
‘96 கிலோ’ உடல் எடையை குறைத்தது எப்படி? -நடிகர் கவுதம் ராம் கார்த்திக்
Published on

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான கவுதம் ராம் கார்த்திக், தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் கவுதம் ராம் கார்த்திக் சிக்ஸ்பேக் உடல் அமைப்புக்கு மாறி உள்ளார்.

‘96 கிலோ’வாக இருந்த தனது உடல் எடையை குறைத்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

9 மாதங்களில் ரத்தம், வியர்வை, அழுகை, பசியை அடக்குதல், தொடர்ச்சியாக உழைத்தல், பழைய காயத்தில் இருந்து மீளுதல், எனது பயிற்சியாளர் உதவியுடன் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்கு தயாராகி உள்ளேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிகப்பெரிய மாற்றம். இந்த கதாபாத்திரத்தில் என்னை நம்பியதற்கு எனது இயக்குனர் மற்றும் நண்பர் மனு ஆனந்த்துக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com