

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் கான்சிட்டி. படத்தில் இவர்களுடன் யோகிபாபு, வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பவர்ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள், டீசர், முதல் இரண்டு பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படம் ஜூன் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான ஃபிராடு பயலே பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.