ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி படத்தை இயக்கியுள்ளார்.
ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் நடிக்கும் 'லவ் அண்ட் வார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Published on

‘96’ படம் மூலம் பிரபலமான கௌரி கிஷன் - ஆதித்யா பாஸ்கர் ஜோடி மீண்டும் இணைந்து நடித்துள்ள புதியப் படத்திற்கு 'லவ் அண்ட் வார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவிற்கு நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜீவா வாழ்த்து தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி எஸ் ஆர் , நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணா பாஸ்கர் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், படம்குறித்த பிற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com