NEEK பட ஹீரோவின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

இப்படம் இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEEK பட ஹீரோவின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, நடிகர்கள் பவிஷ் நாராயண் மற்றும் நாக துர்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பொழுதுபோக்குத் திரைப்படமான 'லவ் ஓ லவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஸைனிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட்டின் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெயின்மென்ட் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸின் ஜி. தனஞ்சேயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஃபாக்ஸ்ன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவாளராகவும், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராகவும், பி.ஏ. மகேந்திரன் கலை இயக்குநராகவும், அபிஷேக் ஸ்ரீனிவாஸ் சண்டை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' புகழ் பவிஷ் நாராயண் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல தெலுங்கு யூடியூப் சென்சேஷன் நாக துர்காவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படத்தில் பழம்பெரும் இயக்குனர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலமான நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் வனிதா விஜயகுமார், ஆதித்யா கதிர், ரம்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com