எதிர்நீச்சல் நடிகையின் ‘பயர்’ பிறந்தநாள்

மதுமிதா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன் விமர்சனத்துக்குள்ளாகியும் வருகிறது.
எதிர்நீச்சல் நடிகையின் ‘பயர்’ பிறந்தநாள்
Published on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘எதிர்நீச்சல்’. தொடரில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் மதுமிதா. தற்போது அவருக்கு பதில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.

தொடர்ந்து மதுமிதா ‘அய்யனார் துணை’ என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மதுமிதா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருவதுடன் விமர்சனத்துக்குள்ளாகியும் வருகிறது.

பிறந்தநாள் வீடியோவில் மதுமிதா வாயில் இருக்கும் மெழுகுவர்த்தியை சிகரெட் பற்ற வைத்தது போல் ஒருவர் பற்ற வைக்க தொடர்ந்து மதுமிதா கையில் கேக்கை வைத்தபடி ஊதும் போது தீப்பிழம்புகள் சிதறி பறக்கிறது. இந்த காட்சிகளை மதுமிதா தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோ காட்சிகளுக்கு மதுமிதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com