மோகன்லாலின் 'த்ரிஷ்யம்-3' இன்று மாலை வெளியாகிறது டீசர்

ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது.
மோகன்லாலின் 'த்ரிஷ்யம்-3' இன்று மாலை வெளியாகிறது டீசர்
Published on

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றப் படம் த்ரிஷ்யம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதுவும் வெற்றிப் பெற்றநிலையில் தற்போது மூன்றாம் பாகம் த்ரிஷ்யம் -3 உருவாகி உள்ளது.

முந்தைய பாகங்களைத் தொடர்ந்து, ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான திருப்பங்களை இப்படம் விவரிக்கிறது. இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன் மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர் முந்தைய பாகங்களில் நடித்த அதே கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்துள்ளனர்.

இப்படம் வருகிற அதாவது மே மாதம் 12-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனிடையே, த்ரிஷ்யம் -3 படத்தின் நேரம் 2 மணி 39 நிமிடங்கள் (159 நிமிடங்கள்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் த்ரிஷ்யம்-3 படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com