முதல்வரின் முடிவில் தலையிடாதீங்க: நடிகர் விஷாலுக்கு அருண் விஜய் பதிலடி!

அமைச்சர் ராஜ்மோகனுக்கு சினிமாத்துறை ஒதுக்கப்பட்டதற்கு நடிகர் விஷால் ஆட்சேபனை தெரிவித்திருந்த நிலையில், அருண் விஜய் பதில் அளித்துளளார்.
முதல்வரின் முடிவில் தலையிடாதீங்க: நடிகர் விஷாலுக்கு அருண் விஜய் பதிலடி!
Published on

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பதவியேற்றார். என் அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்திருந்தார்.

விஜய் அவர்கள் பதவி ஏற்றபோதே, 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அப்போது ஒத்துக்கிடாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியானது.

இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உட்பட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளி கல்வித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, சினிமாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் விஷால் ராஜ்மோகனுக்கு திரைத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது மிகவும் வருத்தமளிப்பதாகவும், திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை, அனுபவம் இல்லாத ராஜ்மோகனிடம் வைப்பது சரியாக இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம்' என்றும் 'மக்கள் அவர்களை நம்பித்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் வேண்டுமானாலும் மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, அதன் பிறகு உங்கள் விருப்பத்தை பதிவிடுங்கள். மீண்டும் சொல்கிறேன் முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம்' என்று கூறினார்.

'முதலமைச்சர் திரைத்துறையில் இருந்தவர் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அவருக்கும் நம் நிலைமை புரியும். அவர் நமக்கு நல்லது மட்டும் தான் செய்வர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தயவு செய்து முதலமைச்சரின் முடிவுகளை மதித்து மாற்றத்திற்காக காத்திருங்கள். நாம் தவறான முடிவுகளையும், தவறான செய்திகளையும் வெளியிட வேண்டாம். பொறுத்திருங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்'என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com