இயக்குநர் பிரேம் குமார்- பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குநர் பிரேம் குமார்- பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!
Published on

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32-வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com