'கருப்பு' வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி... ஆனால்..! வாடிவாசல் குறித்து பேசிய இயக்குநர் மிஸ்கின்

‘கருப்பு’ பாடம் இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சூர்யா மிகச்சிறந்த திறமை வாய்ந்த ஒரு நடிகர்.
'கருப்பு' வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி... ஆனால்..! வாடிவாசல் குறித்து பேசிய இயக்குநர் மிஸ்கின்
Published on

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படம் தொடர்பான அறிவிப்புகள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையை ‘வாடிவாசல்’ படத்தின் மையக்கரு என்று கூறப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்பு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த படம் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இதற்கிடையே, இயக்குநர் மிஸ்கின், ‘வாடிவாசல்’ படம் குறித்து கூறுகையில்,

உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘வாடிவாசல்’ படத்தின் கதை எனக்கு சொல்லப்பட்டது, ​அது மிகச் சிறப்பான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அந்தக் கதையைக் கேட்ட கணமே நான் பிரமித்துப்போனேன். எப்பேர்ப்பட்ட அற்புதமான கதை அது!

சூர்யாவின் திரைப்பயணத்திலேயே இது ஒரு எல்லா காலங்களிலும் சாதனைப் படமாக (all-time hit) அமையும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், திட்டமிட்டபடி பணிகள் நடைபெறாமல் படம் தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே இருப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது.

அதே வேளையில், ‘கருப்பு’ பாடம் இவ்வளவு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருப்பதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சூர்யா மிகச்சிறந்த திறமை வாய்ந்த ஒரு நடிகர்.

கடந்த காலகட்டத்தில் அவருக்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் கடந்து, இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, சூர்யாவுக்கு இவ்வளவு பெரியதொரு 'பிளாக்பஸ்டர்' வெற்றியைப் பரிசளித்திருப்பதைக் கண்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com