இயக்குநர் மாரி செல்வராஜின் புது அவதாரம்

இனிவரும் காலங்களில் இப்படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜின் புது அவதாரம்
Published on: 

இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் சமூகக் கருத்துக்கள் மற்றும் யதார்த்தமான கதைக் களங்கள் மூலம் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் காளமாடன் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார். தயாரிப்பாளராக இறங்கும் மாரிசெல்வராஜின் முதல் படத்தை, அவரது உதவி இயக்குநரான அரவிந்த் இயக்கவுள்ளார். இப்படத்தில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நிலையில், ஸ்வஸ்திகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்திற்கான பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும், இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களின் சில பகுதிகளை மாரி செல்வராஜே எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இனிவரும் காலங்களில் இப்படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com