

ராஜா ராணி, தெறி படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அட்லீ. அதனைத்தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து அடுத்தடுத்து படங்கள் எடுத்து பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். தொடர்ந்து பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜாவான் படம் எடுத்தார். பான் இந்தியா படமான இப்படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ‘ராக்கா’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தனது மனைவி பிரியா கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் அட்லீ அறிவித்தார். அதனை தொடர்ந்து மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிழச்சியையும் நடத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில், அட்லீ- பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரியாவை திருமணம் செய்துகொண்டார் அட்லீ. இந்த தம்பதிக்கு முன்னரே மீர் என்ற ஆண்குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.