நாகரீக அரசியலை பழகுங்கள்... நடிகை குறித்த சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு அமீர் கண்டனம்

இயக்குநர் அமீர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகரீக அரசியலை பழகுங்கள்... நடிகை குறித்த சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு அமீர் கண்டனம்
Published on: 

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப்பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசை கண்டித்து நேற்று விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சி.வி.சண்முகம் எம்.பி., நடிகை குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் அவருக்கு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இயக்குநர் அமீர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாகப் பேச வேண்டாம். நாகரீக அரசியலைப் பழகுங்கள் அரசியல்வாதிகளே என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com