கருத்து வேறுபாடு.. கணவரை பிரிகிறாரா மவுனிராய்?

மவுனிராய் சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு.. கணவரை பிரிகிறாரா மவுனிராய்?
Published on

இந்தியில் 'நாகினி' என்ற சீரியல் மூலமாக பிரபலமானவர், மவுனிராய். இந்தி மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் இந்த சீரியல் மூலமாக ரசிகர்களை ஈர்த்தார். தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும் திகழ்கிறார்.

மவுனிராய் 2022-ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்தவரும், துபாய் தொழில் அதிபருமான சூரஜ் நம்பியார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் மவுனிராய் தனது கணவர் சூரஜ் நம்பியாரை இன்ஸ்டாகிராமில் 'அன்பாலோ' செய்துள்ளார். அதேபோல அவரது கணவரும் மவுனிராயை 'அன்பாலோ' செய்துள்ளார்.

அதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று பேசப்படுகிறது. இது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com