சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தியதா துரந்தர் 2? - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு! | Dhurandhar 2

'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தில் சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றதாக இணையத்தில் விமர்சனம் எழுந்தது.
Durandhar
Durandhar
Published on: 

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய உளவாளியை பற்றிய கதைக்களத்தில் இப்படம் அமைந்திருந்தது. இதன் 2 ஆம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் கடந்த மார்ச் 19 இல் வெளியாகி முதல் படத்தை போல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படத்தில் சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றதாக இணையத்தில் விமர்சனம் எழுந்தது.

இதையடுத்து இதுகுறித்து துரந்தர் தி ரிவெஞ்ச் படக்குழு விலகம் கொடுத்துள்ளது. அதில், "படத்தின் கதாநாயகன் சீக்கிய தலைப்பாகையை அணிந்து புகை புகைபிடிப்பது போன்ற காட்சிகள் முற்றிலும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பொய்யான புகைப்படம் ஆகும். சீக்கிய சமூகத்தின் மீது நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம்.திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com