Dhurandhar 2 | முன்பதிவில் 1.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை... ரிலீசுக்கு முன்பே வசூலை தொடங்கிய துரந்தர் 2

Dhurandhar 2 | முன்பதிவில் 1.6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை... ரிலீசுக்கு முன்பே வசூலை தொடங்கிய துரந்தர் 2
Published on
Summary

திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது

.மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும். இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் இன்னும் வெளியாக நிலையில், முன்பதிவில் மட்டும் துரந்தர் 2 படத்தின் 1,63,428 டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துரந்தர் 2 திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில், இந்தி மொழியில் மட்டும் 1,51,953 டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இந்தப் படம் இதுவரை ரூ. 28.19 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com