துருவ் விக்ரமின் புதிய படம்

அறிமுக இயக்குனர் கரண் அரவிந்தகுமார் என்பவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
துருவ் விக்ரமின் புதிய படம்
Published on

முன்னணி நடிகர் விக்ரமின் மகன் துருவ் 'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். மகான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த 'பைசன்' படம் துருவ் விக்ரமை இன்னும் பிரபலமாக்கியது.

‘பைசன்’ திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதுதொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி அறிமுக இயக்குனர் கரண் அரவிந்தகுமார் என்பவரது இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

கரண் அரவிந்த்குமார் இதற்கு முன் துருவ் விக்ரம் நடித்த 'ஆதித்யா வர்மா' படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் 'கருப்பு' திரைப்படத்தின்

எழுத்தாளர்களில் ஒருவரும் ஆவார்.

இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாய் அபயங்கரை இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com