தனுஷின் 'கர'.. இன்று மாலை இசை வெளியீட்டு விழா - டிரெய்லரும் வெளியீடு

சமீபத்தில் ‘கர’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது.
தனுஷின் 'கர'.. இன்று மாலை இசை வெளியீட்டு விழா - டிரெய்லரும் வெளியீடு
Published on

நடிகர் தனுஷ் தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில், நடிகர் பிருத்வி பாண்டியராஜன் "முருகேசன்" என்ற கதாபாத்திரத்திலும், கே.எஸ். ரவிக்குமார் "கந்தசாமி" என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீஜா ரவி "தனம்" என்ற கதாபாத்திரத்திலும், மமிதா பைஜூ "செல்லி" என்ற கதாபாத்திரத்திலும், கருணாஸ் "காசி மாயன்" என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு "பரதன்" என்ற கதாபாத்திரத்திலும் நடிகின்றனர்.

‘கர’ படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு/ஏ. சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் ‘கர’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது.

இந்நிலையில், ‘கர’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் இன்று (ஏப்ரல் 19) வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுஅறிவித்துள்ளது.

மாலை 6 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீடு நடைபெற உள்ளது. விழாவில் தனுஷின் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்தப் படம் வருகிற திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com