தனுஷ்-ஸ்ரீலீலா காம்போவில் மிரட்டலாக உருவாகும் 'ஓம்' பட நடனப் பாடல்!

இப்பாடல், தனுஷின் திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான ஒரு நடனப் பாடலாக இருக்கும்.
 Dhanush-Sreeleela Combo
Published on

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாகவும், பன்முகத்திறமை கொண்ட கலைஞராகவும் விளங்கும் நடிகர் தனுஷ் மற்றும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஓம்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் போடப்பட்டுள்ள சிறப்பு செட்டில், இப்படத்தின் மிக முக்கியமான பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடல், தனுஷின் திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான ஒரு நடனப் பாடலாக இருக்கும் எனத் திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, ‘மாரி 2’ திரைப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி கூட்டணியில் வெளியாகி, உலகளவில் யூடியூபில் சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடலைப் போலவே, இந்த புதிய பாடலும் ரசிகர்களைக் கவரும் வகையில் அதிவேக மற்றும் அதிரடியான நடன அசைவுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

தனுஷின் அசாத்தியமான நடனத் திறமைக்கும், நடிகை ஸ்ரீலீலாவின் அசாத்திய வேகத்திற்கும் சவால் விடும் வகையில் இப்பாடலின் நடனக் கோரியோகிராபி அமைக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு இது ஒரு செம்ம எனர்ஜிட்டிக் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அண்மைக் காலமாக தனுஷ் மற்றும் ஸ்ரீலீலா காம்போ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்த நிலையில், இந்த அதிரடி நடனப் பாடல் குறித்த தகவல் வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com