

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், 'போயஸ் கார்டனில் நீங்கள் வீடு வாங்கியதும், அதுசம்பந்தமாக பேசப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட் டது.
அதற்கு தனுஷ் பதிலளிக்கையில், "விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது? என்பது நம் கையில் தான் இருக்கிறது. போயஸ் கார்டனில் நானெல்லாம் வீடு வாங்கக்கூடாதா? என்று அப்போது நான் கேட்டது, பலரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் என்னிடம் செல்பி எடுத்த ரசிகர் ஒருவர், 'உங்களது பேச்சு என் மகனுக்கு ஊக்கத்தை தந்ததால், முன்பைவிட பயங்கரமாக வேலை செய்கிறான்' என்று என்னிடம் பெருமையாக தெரிவித்தார்.
எனவே நம் பேச்சை ஒரு உந்துசக்தியாக எடுத்துக்கொள்ளட்டும். இல்லையென்றால் மீம்ஸ்களுக்காக பயன்படட்டும். அதுவும் ஒரு பொழுதுபோக்கு தானே. அதுவும் நம் வேலை தானே. அதனால் மீண்டும் கேட்கிறேன், ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?". என்று குறிப்பிட்டார்.