லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘டிசி’ படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.
லோகேஷ் கனகராஜின் 'DC' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ‘டிசி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

அனிருத் இசையில்...

இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் ‘டிசி’ படம் தொடர்பாக வெளியான கிளிம்ப்ஸ் மற்றும் டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

ஜூலை 31-ந்தேதி

இந்த நிலையில், ‘டிசி’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘டிசி’ படம் வருகிற 31-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com