ஜூலை மாத இறுதியில் வெளியாகும் ‘டயங்கரம்’

இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜூலை மாத இறுதியில் வெளியாகும் ‘டயங்கரம்’
Published on

பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடித்து வரும் திரைப்படம் ‘டயங்கரம்’. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சித்து குமார் இசையமைக்கும் இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மேற்கொள்ள பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்த கதையாக உருவாகி வரும் இந்த படத்தை ஜூலை மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ‘டயங்கரம்’ படத்தை ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது ஒரு மாத காலம் தாமதமாக வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com