டே 11- திரை விமர்சனம்

டே 11- திரை விமர்சனம்

அனிலின் இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
Published on
டே 11- திரை விமர்சனம்(2 / 5)

ஒரு மர்மமான கற்பனை விளையாட்டு-க்கு அடிமையாகும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் நகர்கிறது. அவர்கள் கேட்கும் ஆசைகள் உடனடியாக நிறைவேற ஆரம்பிக்கிறது.

ஆனால் அந்த விளையாட்டுக்கு பின்னால் இருக்கும் இருண்ட ரகசியம் தெரிய வரும்போது, அவர்களில் ஒருவரின் வாழ்க்கையே ஆபத்தாகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

மனோஜ் மேடி, சுவேதா அபிராமி, ஆதர்ஷ், அபிமன்யு, ரவி சந்திரன் ஆகிய இளைஞர்களின் நடிப்பு இயல்பாக உள்ளது.

இயக்கம்

பேண்டஸி திரில்லர் வகையை மையமாக வைத்து புதிய கான்செப்ட்-ஐ முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீதிகா. ஆரம்பத்தில் கேம் உலகம் மற்றும் கதாபாத்திரத்தின் அறிமுகம் சுவாரஸ்யமாக இருந்தாலும், படம் முழுவதும் அந்த தீவிரம் தொடர்ந்து இருக்கவில்லை.

குறிப்பாக சஸ்பென்ஸ் பில்ட்-அப் சில இடங்களில் நன்றாக வேலை செய்கிறது. பேண்டஸி கூறுகள் மற்றும் ரியாலிட்டி மிக்ஸ் ஆகும் காட்சிகள் படத்திற்கு ஒரு வித்தியாசமான உணர்வு கொடுக்கிறது.

திரைக்கதை நேர்மாறாக இருப்பதால் பல இடங்களில் படம் மெதுவாக ஆகிறது. சில திருப்பங்கள்-கணிக்க கூடியதாக இருப்பதும் மைனஸ். உணர்ச்சி வசமான காட்சிகள் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

கிளைமாக்சில் சொல்லப்படும் கருத்து நல்ல முயற்சியாக இருந்தாலும், அதை சொல்ல வந்த விதம் முழுமையாக தாக்கம் கொடுக்கவில்லை.

ஒளிப்பதிவு & இசை

செல்வாவின் ஒளிப்பதிவும், அனிலின் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com