Con City Movie

கான் சிட்டி- திரை விமர்சனம்

அரவிந்த் விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
Published on
கான் சிட்டி- விமர்சனம்(3 / 5)

கதை

பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கும் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோர், வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மோசடி மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் ஏமாற்றப்பட்டு மக்களின் பணத்தையும் இழக்கிறார்கள். போலீசில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழும் அவர்களை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் மீண்டும் ஒரு பெரிய மோசடியில் ஈடுபட வைக்கிறார்.

இறுதியில் அந்த திட்டம் வெற்றி பெற்றதா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

நாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், வழக்கமான இறுக்கமான கதாபாத்திரத்தில் இருந்து விலகி, வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தை குறையின்றி கையாண்டிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அன்னா பென், இயல்பான நடிப்பின் மூலம் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். யோகி பாபு, வழக்கமான நகைச்சுவை பாணியை தவிர்த்து புதிதாக முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைத்தாலும், முழுமையாக எடுபடவில்லை. வடிவுக்கரசி, தனது எக்ஸ்பிரஷன்கள் மற்றும் யோகி பாபுவுடனான காட்சிகள் மூலம் கவனம் ஈர்க்கிறார்.

ராதாரவி, விடிவி கணேஷ், தம்பி ராமையா, ரமேஷ் திலக், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்கம்

எழுதி இயக்கியிருக்கும் ஹரிஸ் துரைராஜ், மக்களின் பேராசையை மையமாக வைத்து மோசடிகளை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார். கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதை பல இடங்களில் ஏற்கனவே பார்த்த படங்களின் சாயலை ஏற்படுத்துகிறது. புதிய கதை, வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுகள்.

இசை

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.

ஒளிப்பதிவு

அரவிந்த் விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com