கமாண்டோவின் லவ் ஸ்டோரி- திரை விமர்சனம்

கமாண்டோவின் லவ் ஸ்டோரி- திரை விமர்சனம்

ராணுவ வீரர்கள் பற்றிய வாழ்க்கை, மற்றும் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வீர அன்பரசு.
Published on
கமாண்டோவின் லவ் ஸ்டோரி- விமர்சனம்(2.5 / 5)

கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் முத்து, குறும்படம் எடுப்பதற்காக ராணுவ அதிகாரியான பப்லு பிருத்விராஜை சந்திக்கிறார். அப்போது ராணுவ வீரர் வீர அன்பரசு என்பவர் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார் என்று சொல்லுகிறார். வீர மரணம் அடைந்த வீர அன்பரசு, தன்னுடைய தந்தை என்று ஆகாஷ் முத்துக்கு தெரிய வருகிறது. உடனே தாத்தா, பாட்டியை சந்தித்து, தன் தந்தை வீர அன்பரசு பற்றிய வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்கிறார். மேலும் அவர்கள் ஆகாஷ் முத்து பிறப்பு மற்றும் தாய் பற்றி சொல்லுகிறார்கள்.

இறுதியில் ஆகாஷ் முத்து தன் தந்தை வீர அன்பரசு வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்டாரா? வீர அன்பரசு எப்படி மரணம் அடைந்தார்? ஆகாஷ் முத்து குறும்படம் எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கும் வீர அன்பரசு, ராணுவ வீரருக்கான கம்பீர தோற்றத்துடன் வலம் வருகிறார். கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாயகியாக நடித்திருக்கும் ஏஞ்சல் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மகனாக வரும் ஆகாஷ் முத்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பப்லு பிருத்விராஜ், ரோபோ சங்கர், சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

இயக்கம்

ராணுவ வீரர்கள் பற்றிய வாழ்க்கை, மற்றும் காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் வீர அன்பரசு. நல்ல கதையை சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். வித்தியாசமான காதல் கதையை எடுத்தாலும் அதில் அழுத்தமான காட்சிகள் குறைவாகவே வைத்திருக்கிறார். இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருக்கலாம்.

ஔிப்பதிவு

வில்லியம்ஸ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

இசை

சிவராமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

X

Maalai Malar
www.maalaimalar.com