குழந்தைப்போல் நடனம் ஆடும் ஸ்ரீலீலா - பிறந்தநாள் வாழ்த்து கூறிய பராசக்தி படக்குழு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று ஸ்ரீலீலா அவரது 24- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
குழந்தைப்போல் நடனம் ஆடும் ஸ்ரீலீலா - பிறந்தநாள் வாழ்த்து கூறிய பராசக்தி படக்குழு
Published on

அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இன்று ஸ்ரீலீலா அவரது 24- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பராசக்தி படக்குழு ஸ்ரீலீலாவிற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ஸ்ரீலீலா ஒரு சிறுகுழந்தையை போல் மிகவும் மகிழ்ச்சியோடு நடனம் ஆடுகிறார். மேலும் வீடியோவின் இறுதியில் படத்தின் கதாப்பாத்திர தோற்றமுடைய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com