யோகிபாபு நடிக்கும் 'சட்னி-சாம்பார்'

சட்னி-சாம்பார் வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார்.
யோகிபாபு நடிக்கும் 'சட்னி-சாம்பார்'
Published on

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் யோகிபாபு. சமீபத்தில் வரும் புதிய படங்கள் பெரும்பாலும் யோகி பாபு நகைச்சுவையுடன் திரைக்கு வருகிறது.

ரஜினியின் ஜெயிலர் முதல் ஷாருக்கானுடன் ஜவான் வரை யோகி பாபு நடித்துள்ளார். திரை உலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வரும் யோகிபாபு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் சட்னி-சாம்பார் என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com