நோலனின் அடுத்த மாஸ்டர்பீஸ்: 'தி ஒடிஸி' ஐமேக்ஸ் புக்கிங் தேதி அறிவிப்பு

கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
நோலனின் அடுத்த மாஸ்டர்பீஸ்:  'தி ஒடிஸி' ஐமேக்ஸ் புக்கிங் தேதி அறிவிப்பு
Published on

ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக 2023இல் வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகள் வென்றது. இது அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓபன்ஹெய்மர் உடைய வாழ்க்கை கதையாகும்.

இந்நிலையில் 'தி ஒடிஸி' என்ற புதிய படம் ஒன்றை நோலன் இயக்கி வருகிறார். இது இவரின் 13வது படம் ஆகும்.

கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகி உள்ளது.

'தி ஒடிஸி' படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பிரமிக்க வைத்தது. ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.

முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் 20 லட்சம் அடிகள் வரை இப்படத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அளந்தால் 600 கி.மீ. நீளத்திற்குச் செல்லக் கூடியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜமாக்ஸ் திரையில் ஒரு ஒரிஜினல் ஜமாக்ஸ் படத்தை காண அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படத்திற்கான இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு வருகிற ஜூன் 8 ஆம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com