சிரஞ்சீவியின் 'Mega 158' படப்பிடிப்பு துவக்கம்!..அண்ணனுக்காக நேரில் வந்த பவர்ஸ்டார்!

மகளாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்
சிரஞ்சீவியின் 'Mega 158' படப்பிடிப்பு துவக்கம்!..அண்ணனுக்காக நேரில் வந்த பவர்ஸ்டார்!
Published on

திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா இன்று ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அவரது தம்பியும், ஆந்திர பிரதேசத்தின் தற்போதைய துணை முதலமைச்சர் மற்றும் நடிகருமான பவன் கல்யாண் தனது அண்ணனின் புதிய படத் தொடக்க விழாவில் பங்கேற்று வாழ்த்தி இந்த படத்தின் முதல் காட்சிக்கான கிளாப்போர்டையும் அடித்து துவங்கி வைத்துள்ளார்.

சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தை ‘ஜனநாயகன்’ படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

கடந்த 2023-ல் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'வால்டேர் வீரய்யா' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் பாபி கொல்லி இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்காக சிரஞ்சீவி தனது உடல் தோற்றத்தை மாற்றி கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த படம் அப்பா - மகள் கதைக்களத்தை கொண்டுள்ளதாகவும், மகளாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார் மற்றும் கதாநாயகியாக பிரியாமணி, இசையமைப்பாளர் எஸ். தமன் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த அதிவேக மாஸ் ஆக்ஷன் திரைப்படம் என்றும் வரும் 2027 சங்கராந்தி பண்டிகை வெளியீட்டை இலக்காகக் கொண்டு மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com