

பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் என பல்வேறு படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சேரனின் தாயார் கமலா பாண்டியன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் சேரனின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமலா பாண்டியன் அவர்களின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொந்த ஊரான பாளையூர்பட்டியில் வைத்து இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.