என் மலர்
சினிமா செய்திகள்

21 ஆண்டுகளுக்குப் பின்.. சேரனின் "ஆட்டோகிராப்" ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது.
- ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டார்.
பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சேரன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் 'ஆட்டோகிராப்'.
இதில் சினேகா, கோபிகா, கனிகா, மல்லிகா ஆகியோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் மூன்று பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காக பாடகி சித்ரா, பாடலாசிரியர் பா.விஜய் தேசிய விருது பெற்றனர்.
பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் பருவம் என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் மே 16ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படம் ரீ-ரிலீஸாவதை ஒட்டி புதிய ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டிரெய்லர் வீடியோவை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.






