எனது மகன்கள் அரசியலுக்கு வரலாம் - கஸ்தூரி ராஜா

சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம்தான்.
எனது மகன்கள் அரசியலுக்கு வரலாம் - கஸ்தூரி ராஜா
Published on

தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவனின் தந்தையுமான கஸ்தூரி ராஜா சென்னையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் சென்னையில் மிகவும் பவர்புல்லான இடம் போயஸ் கார்டன் என்கிறார்களே என்று கேள்வி எழுப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. அதேவேளை இந்நாள் முதல்வர் விஜயும் போயஸ் கார்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் கஸ்தூரி ராஜாவிடம் சென்னையில் மிகவும் பவர்புல்லான இடம் போயஸ் கார்டனா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "சென்னையில் பவர்புல்லான இடம் கோபாலபுரம்தான். கோபாலபுரம் இன்னும் அங்குதான் உள்ளது. கலைஞர் அங்கு தான் வாழந்தார். ஒளி பிறந்த இடம் அது" என்றார்.

மேலும் போயஸ் கார்டன் குறித்து பேசிய அவர், "இளைய தளபதியும் அங்கு வரப்போகிறார்கள் என சொல்கிறார்கள். வரட்டும், நமக்கு அரசியல் வேண்டாம்." என்றார்.

தங்கள் குடும்பத்தில் யாரேனும் அரசியலுக்கு வருவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி ராஜா, "எனது குடும்பத்தில் இருந்து யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். வேண்டாம்னு சொல்ல நம்ம யாரு? நம்ம வர முடியாது, வயசு போயிடுச்சு. எனது மகன்கள் வரலாம், பேரன்கள் வரலாம். ” என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com