தனது வீட்டில் வேலை பார்த்த தொழிலாளர்களை சிறைபிடித்த நடிகர் ரவி மோகன் - காவல்துறை அதிரடி

ரவி மோகனின் மேலாளர் முறைப்படி நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Actor Ravimohan Detains Workers
Published on

நடிகர் ரவி மோகன் தனது அடுத்த படமான 'ஆன் ஆர்டினரி மேன்' மூலம் இயக்குநராக மாறியுள்ளார். மேலும், அவர் லோகேஷ் கனகராஜின் 'பென்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கைடையில் நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்திக்கு எதிராக விவாகரத்து வழக்கில் போராடி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரவி மோகன் நீலாங்கரையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் வீட்டில் வசித்து வருகிறார். அவரின் வீட்டு லாக்கரில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றும், ரூ.40,000 வரையிலான ரொக்கப் பணமும் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரின் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் உட்பட ஐந்து பணியாளர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் சிறை பிடித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், எந்தவொரு தனி நபரும் யாரையும் சிறைபிடிக்கவோ, தனிப்பட்ட விசாரணை நடத்தவோ முடியாது என்று கூறி வேலையாட்களை விடுவித்தனர்.

மேலும் நடிகர் ரவி மோகனுக்கு சட்டப்பூர்வ வழிகளை பின்பற்றுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதையடுத்து ரவி மோகனின் மேலாளர் முறைப்படி நீலாங்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com