தலைவன் தலைவி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!

பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.
தலைவன் தலைவி படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ்!
Published on

'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான தலைவன் தலைவி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம் தயாரித்துள்ள இப்படம் வரும் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நேர அளவு 2 மணிநேரம் 20 நிமிடங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com