Box Office Punch - பட்டைய கிளப்பும் ஆலப்புழா ஜிம்கானா

பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென்.ஆலப்புழா ஜிம்கானா ஒரு ஜாலியான காமெடி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக திரைப்படம் உருவாகியுள்ளது.
Box Office Punch - பட்டைய கிளப்பும் ஆலப்புழா ஜிம்கானா
Published on

பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகரான நஸ்லென். இவர் தற்பொழுது காலித் ரஹ்மான் இயக்கத்தில் ஆலப்புழா ஜிம்கானா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காலித் ரஷ்மான் இதற்கு முன் உண்டா, லவ் , தல்லுமாலா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலப்புழா ஜிம்கானா ஒரு ஜாலியான காமெடி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக திரைப்படம் உருவாகியுள்ளது. 12 ஆம் வகுப்பில் ஃபெயிலான நண்பர்கள் கூட்டம் ஒரு விளையாட்டு துறையில் போட்டிப் போட்டு வென்றால் நமக்கு கிரேஸ் மதிப்பெண் கிடைக்கும் அதை வைத்து நாம் கல்லூரி சேரலாம் என்ற நம்பிக்கையுடன் பாக்சிங் கத்துக் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் கற்றுக் கொண்ட பாக்சிங் உண்மையான வீரர்களுக்கு முன் வெறும் சாதரணமாக இருக்கிறது. இதுதான் படத்தின் ஒன்லைன் கதையாகும்.

திரைப்படம் வெளியாகி மக்களின் வரவேற்பை கருத்தில் கொண்டு கேரளாவில் படத்தின் காட்சிகள் அதிகப்படுத்தியுள்ளனர். மம்மூட்டி நடிப்பில் வெளியான பசூக்கா திரைப்படத்தை விட இப்படத்திற்கு காட்சிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை காலித் மற்றும் ஸ்ரீனி சசீந்தரன் இணைந்து எழுதியுள்ளனர். நஸ்லேன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருடன் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனக்ஹா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் இசையை விஷ்ணு விஜய் மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com