பாட்டல் ராதா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பாட்டல் ராதா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி
Published on

இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் "பாட்டல் ராதா." பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்ம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ள பாட்டல் ராதா திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டன. முதலில் இந்தப் படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பாட்டல் ராதா திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com