பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு

'சாரங்கா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் நாயகனாக தடம் பதித்தார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் மறைவு
Published on

பழம்பெரும் பாலிவுட் நடிகர் சுதேஷ் குமார் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 95.

சுவாசக் கோளாறு காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரது விருப்பப்படி வியாழக்கிழமை காலை வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

வீட்டிலேயே தீவிர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த நாள் காலை அவர் தனது கடைசி மூச்சை சுவாசித்தார்.

அவரது மறைவை அவரது மனைவி ஜெயா தவன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

'சாரங்கா' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் நாயகனாக தடம் பதித்த சுதேஷ் குமார், பிரபல நடிகர் பிருத்விராஜ் கபூரின் உறவினர் ஆவார்.

சுதேஷ் குமார் மறைவு பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com