அர்ஜுன், அபிராமி நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ படத்திற்கு தேதி குறிச்சாச்சு!

ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அர்ஜுன், அபிராமி நடித்துள்ள ‘ப்ளாஸ்ட்’ படத்திற்கு தேதி குறிச்சாச்சு!
Published on: 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast).

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகி உள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘ப்ளாஸ்ட்’ படத்தின் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com