ஆக்ஷன் கிங்கின் Blast... முதல் நாள் வசூல் மட்டுமே இவ்வளவா?

'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
ஆக்ஷன் கிங்கின் Blast... முதல் நாள் வசூல் மட்டுமே இவ்வளவா?
Published on

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast).

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகி உள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ‘ப்ளாஸ்ட்’ படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று வெளியானது. படம் வெளியானது முதல் ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்றை அளித்து வருகின்றனர். இதனால் ‘ப்ளாஸ்ட்’ படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.1.15 கோடி வசூல் குவித்துள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் ‘ப்ளாஸ்ட்’ வசூல் வேட்டையில் ஈடுபடும் என தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com