இன்று மாலை வெளியாகிறது Blast படத்தின் 2-வது சிங்கிள்

ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இன்று மாலை வெளியாகிறது Blast படத்தின் 2-வது சிங்கிள்
Published on

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast).

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் உருவாகி உள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் ஆவார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 'கே.ஜி.எஃப்' புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசை அமைத்தன் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.

ஜான் கொக்கென், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதை தொடர்ந்து ‘ப்ளாஸ்ட்’ படம் வருகிற 28-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் பாடல், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

இந்த நிலையில், ‘ப்ளாஸ்ட்’ படத்தின் இரண்டாம் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com