‘பில்லா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

பில்லா படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
‘பில்லா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!
Published on

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பில்லா படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, பில்லாப் படம் நவீன 4K தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மே.1ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர்.

இது ரஜினி படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் கடந்த 2021ஆம் ஆண்டும் ரீ-ரலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com