பைக்கர் – விமர்சனம்

மோட்டோகிராஸ் போன்ற அதிகமாக பயன்படுத்தப்படாத விளையாட்டை மையமாக கொண்டு கதை சொல்லியிருப்பது படத்தின் பெரிய பலம்.
பைக்கர் – விமர்சனம்
Published on

2003ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் கதையில், ஷர்வானந்த் மோட்டோகார்ட் நடத்தி தனது மனைவி மாளவிகா நாயர் மகன் இஷான் ஆகியோருடன் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஒருநாள் பள்ளியில் தந்தையை பற்றி தவறாக பேசிய நண்பனை மகன் அடிக்கும் சம்பவம் மூலம், ஷர்வானந்த் தனது கடந்தகாலத்தை மறைத்து வாழ்கிறார் என்பதற்கான குறிப்பு கிடைக்கிறது.

இதற்கிடையில், ஷர்வானந்த்தின் தந்தை ஐஎன்ஜி நிறுவன மோசடி குற்றச்சாட்டில் ராஜசேகர் அவமானப்படுத்தப்படுகிறார். தனது தந்தையின் மானத்தை மீட்டெடுக்க, பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோட்டோகார்ட் ரேஸிங் களத்தில் இறங்கும் ஷர்வானந்த், அதில் வெற்றி பெற்றாரா? தந்தை அவரை ஏற்றுக்கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

விகாஸ் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஷர்வானந்த் முழுமையாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார். குறிப்பாக ரேஸிங் காட்சிகளில் அவரது உடல் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தெளிவாக தெரிகிறது. முகபாவனைகளிலும் நன்றாக நடித்துள்ளார். ராஜசேகர் தனது அனுபவத்தால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். தந்தையாகவும், தனக்கான மாஸ்  காட்சிகளிலும் சமநிலையுடன் நடித்துள்ளார். மாளவிகா நாயர் எளிமையான கதாபாத்திரத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார்.

இயக்குநர்

இயக்குனர் அபிலாஷ் ரெட்டி, மோட்டோகிராஸ் போன்ற அதிகமாக பயன்படுத்தப்படாத விளையாட்டை மையமாக கொண்டு கதை சொல்லியிருப்பது படத்தின் பெரிய பலம். வழக்கமான விளையாட்டு படமாக இருந்தாலும், திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. குடும்ப உணர்வுகள், தந்தை-மகன் உறவு ஆகியவை ஓவராக இல்லாமல் கதையோடு கலந்து வருகிறது. சில வசனங்கள் குறிப்பாக நினைவில் நிற்கும் வகையில் உள்ளது. ரேஸிங் காட்சிகள் படத்தின் முக்கிய பலம். பைக் சாகச காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

இசை மற்றும் ஒளிப்பதிவு

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்திற்கு பலம். யுவ்ராஜின் ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல துணையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com